தற்கொலை
தற்கொலை

ஒருதலைக்காதல்: வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

சூலூர் அருகே ஒருதலைக்காதலில் ஈடுபட்ட வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Published on

கோவை:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகன் ராமர் (வயது 18). கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கயம் பாளையத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.

ராமர் கடந்த சில ஆண்டுகளாக லால்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு வேறொரு வாலிபருடன் நிச்சயம் செய்யப்பட்டது. இதனால் ராமர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இவர் தங்கியிருந்த பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்று வி‌ஷத்தை குடித்தார்.

சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராமர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com