ஜம்முவில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 25 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். #JammuBlast
ஜம்முவில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 25 பேர் காயம்
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு பஸ்சில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். #JammuBlast

X

Maalai Malar
www.maalaimalar.com