களக்காடு அருகே மேலும் ஒரு பாலம் உடைந்தது: பொதுமக்கள் தவிப்பு

களக்காடு அருகே சமீபத்தில் பெய்த மழையினால் மேலும் ஒரு பாலம் உடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ளது காடுவெட்டி கிராமம். இந்த ஊர் கீழ காடுவெட்டி, மேல காடுவெட்டி என 2 ஊராக உள்ளது. நம்பியாற்றின் குறுக்கே இரு ஊர்களையும் இணைக்கும் வகையில் பாலம் உள்ளது. இந்த வழியாகத்தான் கீழ காடுவெட்டி பகுதி பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவிகள் மேல காடுவெட்டி சென்று பஸ் ஏறுவது வழக்கம்.

சமீபத்திய மழையினால் இந்த பாலமும் உடைந்து சேதமாகிவிட்டது. பாலத்தில் மக்கள் நடக்கூடிய பகுதி அப்படியே இடிந்து ஆற்றில் விழுந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பாலத்தின் சுவரின் நடந்து செல்கிறார்கள். இது எந்நேரமும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இந்த பாலத்தை கீழ காடுவெட்டி பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பாலம் உடைந்ததால் இப்பகுதி மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அதிகரிகள் யாரும் இதை பார்த்து மாற்று நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் விரக்தியில் உள்ளனர். எனவே போர்க்கால நடவடிக்கையாக இந்த பாலத்தை சரிசெய்து அப்பகுதி மக்கள் போக்குவரத்துக்கு வசதி செய்து கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com