ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

குற்றாலம் அருகே ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

தென்காசி:

குற்றாலம் காசிமேஜர்புரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). இவர் குற்றாலநாத சுவாமி கோவிலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.  அவர் அப்பகுதியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஆற்றில் மூழ்கி இறந்தார்.

இதுகுறித்து குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com