சோழவரம் அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி

சோழவரம் அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ. 50 லட்சம் நிலம் மோசடி செய்த வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
சோழவரம் அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி
Published on

திருவள்ளூர்:

சென்னை, ஜவகர் நகரை சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான நிலம் சோழவரத்தை அடுத்த அலமாதி பகுதியில் உள்ளது.

இந்த நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து செங்குன்றத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. நிலத்தின் மதிப்பு ரூ. 50 லட்சம் ஆகும்.

இது குறித்து குமார், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தியிடம் புகார் செய்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு அவர் உத்தரவிட்டார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானவேல், சப்-இன்ஸ்பெக்டர் லியோ பிரான்சிஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது ஆள் மாறாட்டம் செய்து குமாரின் நிலம் அபகரிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com