ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய நபர் கைது

ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய நபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது
கைது
Published on

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக பயணிகளிடம் லேப்டாப், செல்போன் உள்ளிட்டவை தொடர்ந்து திருடப்படுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். சம்பவத்தன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா கார பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(50) என்பதும் ரெயில் பயணிகளிடம் லேப்டாப் செல்போன் திருடியதும் தெரிய வந்தது.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com