மும்பை கமலா மில் தீ விபத்து: ‘ஒன் அபோவ்’ ஓட்டல் உரிமையாளர்கள் 2 பேர் கைது

மும்பை கமலா மில் தீவிபத்து தொடர்பாக, ஒன் அபோவ் ஓட்டல் உரிமையாளர்கள் ஜிகார் சங்வி மற்றும் கிரிபேஷ் சிங்வி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை கமலா மில் தீ விபத்து: ‘ஒன் அபோவ்’ ஓட்டல் உரிமையாளர்கள் 2 பேர் கைது
Published on

மும்பை:

மும்பை கமலா மில் தீவிபத்து தொடர்பாக, ஒன் அபோவ் ஓட்டல் உரிமையாளர்கள் ஜிகார் சங்வி மற்றும் கிரிபேஷ் சிங்வி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

மும்பை லோயர் பரேல் சேனாபதி பாபத் மார்க் பகுதியில் கமலா மில் வளாகம் உள்ளது. இங்கு ஓட்டல்கள், மது விடுதிகள், பிரபல தனியார் தொலைக்காட்சி அலுவலகங்கள் உள்பட பல அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இங்குள்ள 4 மாடி கட்டிடத்தின் மேல் மாடியிலுள்ள ‘ஒன் அபோவ்’ என்ற ஒரு ஓட்டலில் கடந்த 28-ம் தேதி இரவு நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். 55 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக ‘ஒன் அபோவ்’  ஓட்டல் மேலாளர் இரண்டு பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஓட்டல் உரிமையாளர்கள் ஜிகார் சங்வி, கிரிபேஷ் சிங்வி மற்றும் அப்ஜீத் மன்கர் ஆகிய மூன்று பேரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பற்றி தகவல் கூறுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஒன் அபோவ் உரிமையாளர்கள் ஜிகார் சங்வி மற்றும் கிரிபேஷ் சிங்வி ஆகியோரை

மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com