

ஓமலூர்:
ஓமலூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க துணைத்தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலைகளை தனியார் பராமரிக்க வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர்களுக்கு கையுறை, முககவசம், கிருமி நாசினி போன்றவை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோட்ட தலைவர் செல்வம், கோட்ட செயலாளர் கலைவாணன் உள்பட சாலைபணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டகிளை பொருளாளர் சித்துராஜ் நன்றி கூறினார்.