கர்நாடக தேர்தல் தேதி முன்கூட்டியே கசிவு, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - ஓ.பி.ராவத்

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை பா.ஜ.க. இணைய பொறுப்பாளர் முன்கூட்டியே கசியவிட்டதற்கு முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் தேதி முன்கூட்டியே கசிவு, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - ஓ.பி.ராவத்
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் எதிர் பார்க்கப்பட்ட கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

ஆனால் தேர்தல் கமி‌ஷன் அறிவிக்கும் முன்பே கர்நாடக தேர்தல் தேதி வெளியானது. பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடகா தேர்தல் தேதியை பதிவிட்டிருந்தார்.

தாங்கள் அறிவிக்கும் முன்பே தேர்தல் தேதி வெளியானதால் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்தது.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறும்போது, ‘‘தகவல் கசிந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். பா.ஜனதா நிர்வாகி அமித் மால்வியா வெளியிட்டது பற்றி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com