கோவையில் இன்று கார் மோதி முதியவர் பலி

கோவையில் ரோட்டை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தில் அவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோவை:

கோவை ஒத்தக்கால்மண்டபம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 57). இவர் இன்று காலை கோவை- பொள்ளாச்சி ரோட்டில் வந்தார்.

அங்குள்ள பிரீமியர் மில் அருகே வந்தபோது ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியே வந்த கார் சுப்பிரமணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com