பாலக்கோடு அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

பாலக்கோடு அருகே விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்ட மூதாட்டி மனமுடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள மணியகாரன்கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 60). இவர்களுக்கு ஒரு பெண் உள்ளது. சின்னபொண்ணு சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டிருந்தது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அவர் கடந்த 21-ந் தேதி விஷம் குடித்தார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சின்ன பொண்னை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். சின்னபொண்ணு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12 மணிக்கு உயிரிழந்தார்.

இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com