நகைகள் கொள்ளை
நகைகள் கொள்ளை

போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 10 பவுன் பறிப்பு

மதுரையில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 10 பவுன் நகையை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Published on

மதுரை:

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தெற்குமாட வீதியைச் சேர்ந்தவர் செல்லப்பெருமாள். இவரது மனைவி வசந்தா (வயது 61). இவர் சம்பவத்தன்று வீட்டு வாசல் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 டிப்-டாப் ஆசாமிகள் தங்களை போலீஸ் என வசந்தாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

இந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. நீங்கள் அணிந்திருக்கும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே நகையை வீட்டில் வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

தொடர்ந்து 2 மர்ம நபர்கள் தங்களிடம் இருந்த பர்சை கொடுத்து அதில் நகையை வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இதை நம்பி, தான் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழற்றி பர்சில் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென போலீஸ் என கூறிய மர்ம நபர்கள், வசந்தா கையில் வைத்திருந்த நகை பர்சை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com