தாமரைப் பூ பறிக்க முயன்றபோது குளத்தில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

தாமரைப் பூ பறிக்க முயன்றபோது குளத்தில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

வில்லியனூர்:

கரிக்கலாம்பாக்கம் - பாகூர் சாலையில் உள்ள தனியார் கம்பெனி அருகில் உள்ள குளத்தில் தாமரை பூக்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பறிப்பது வழக்கம். நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தாமரை பூ பறிக்க வந்தபோது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் குளத்தில் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் விரைந்து வந்து குளத்தில் கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த மூதாட்டி மனநிலை பாதிக்கப்பட்டு கரிக்கலாம்பாக்கம் பகுதியில் சுற்றி வந்தவர் என்பது தெரியவந்தது. இவர் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது குளத்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com