அரக்கோணம் மூதாட்டி மர்ம மரணம்

அரக்கோணம் அருகே மூதாட்டி மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை கிராமம் இருளர் காலனியை சேர்ந்தவர் மொட்டையம்மாள் (வயது90), மர்மமான முறையில் நேற்று முகத்தில் பலமான வீக்கங்கள் உடன் சந்தேகப்படும்படியாக இறந்து கிடந்தார். அவரை யாரும் கொலை செய்து விட்டார்களா? அல்லது எப்படி இறந்தார் என போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் இருந்து சிம்பா என்கிற மோப்பநாய் துப்பு துலக்கியது. மூதாட்டியின் உடல் அருகே இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தடய நிபுணர்கள் சில தடயங்களை சேகரித்து சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மூதாட்டி எப்படி இறந்தார் என்ற விபரம் தெரியவரும்.

அரக்கோணம் டி.எஸ்.பி. மனோகரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com