அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவர் தற்கொலை

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருச்சி:

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெரியார் சிலையை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பியில் நேற்று மாலை முதியவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுபற்றி தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை? அவரது சட்டை பாக்கெட்டில் அதிக அளவு மாத்திரைகள் இருந்தன. இதனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com