கல்லாவி அருகே பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

கல்லாவி அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவியை அடுத்துள்ள வேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜீ (வயது70). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். 

இதனால் மனமுடைந்த ராஜ் கடந்த 21-ந்தேதி அன்று வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com