ராஜபாளையத்தில் முதியவர் வெட்டிக்கொலை- தொழிலாளி கைது

முன் விரோதத்தில் முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையத்தில் முதியவர் வெட்டிக்கொலை- தொழிலாளி கைது
Published on

விருதுநகர்:

ராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 65). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்திக்கும் முன் விரோதம் இருந்தது.

சம்பவத்தன்று கோவிந்தன் பஜாரில் நின்றபோது அங்கு வந்த ஈஸ்வரமூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அவர் கத்தியால் வெட்டியதில் கோவிந்தன் காயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிததும் பலனின்றி கோவிந்தன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கீழராஜ குலராமன் போலீசார் விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com