வேதாரண்யம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

வேதாரண்யம் அருகே தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலி
பலி
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மருதூர் வடக்கு ராசாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 65). விவசாய கூலி தொழிலாளி.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முருகானந்தம், மருதூர் தெற்கு கிராமத்தில் உள்ள மைத்துனர் முருகையன் என்பவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது செல்லும் வழியில் இருந்த தரைமட்ட கிணற்றில் முருகையன் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே முருகையன் மாயமானதாக வாய்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முருகையன், கிணற்றில் தவறி விழுந்து பலியானது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com