இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

கும்பகோணம் அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைது
கைது
Published on

கும்பகோணம்:

கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர், வேட்டமங்கலம், தெற்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் மகள் பிரியா (26). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில் கடந்த 22-ந்தேதி இவருக்கு 5 மாத ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனையறிந்த பிரியாவின் பெற்றோர்கள், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் இது குறித்து பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் பிரியாவிடம் விசாரணை நடத்தினர். அதில் மனநிலை சரியில்லாததால் நான் ஆடு மேய்த்து வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் (65), என்னிடம் நைசாக பேசி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பமானேன். வீட்டில் சொல்லாமல் இருந்த நிலையில் எனக்கு குறை மாதத்தில் பிரசவமானது என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com