டேங்கர் லாரி ஸ்டிரைக்கிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல்

டேங்கர் லாரி ஸ்டிரைக்கிற்கு தடை விதிக்க கோரி எண்னெய் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் தொடரப்பட்டு உள்ளது.
கேஸ் டேங்கர் லாரிகள்
கேஸ் டேங்கர் லாரிகள்
Published on

சென்னை:

தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் 700 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்தும், விடுபட்ட லாரிகளுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தியும் ஜூலை 1-ம்  தேதி காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்தால் தென்னிந்தியாவில் கேஸ் விநியோகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், டேங்கர் லாரி ஸ்டிரைக்கிற்கு தடை விதிக்க கோரி இந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது

அந்த மனுவில், அத்தியாவசிய சேவை சட்டப்படி வாடிக்கையாளர்களுக்கு காஸ் சிலிண்டர்கல் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், எல்.பி.ஜி. சிலிண்டர் நிரப்பும், இறக்கும் இடங்களில் பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com