

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisationof Islamic Cooperation (OIC) அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 முஸ்லிம் நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்நாடுகளில் வாழும் சுமார் 160 கோடி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த மாநாட்டின்போது ‘ஐக்கிய நாடுகள் சபை முன்னர் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஜம்மு-காஷ்மீரில் வாழும் மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்' என வலியுறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் அரசியல் மற்றும் சமூக நிலவரங்களை கண்காணிக்க சவுதி அரேபியாவை சேர்ந்த யூசுப் அல்டோபே என்பவரை இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு நியமித்துள்ளது.