மேற்கு வங்க சிறையில் வன்முறை- தடுக்க சென்ற அதிகாரி மீது கைதிகள் தாக்குதல்

மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட பிரச்சினை பெரும் வன்முறையாக மாறியது.
பரூய்பூர் சிறைச்சாலை
பரூய்பூர் சிறைச்சாலை
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடையே நேற்று மாலை திடீரென மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரிடையே ஏற்பட்ட இந்த சண்டையின்போது, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். கற்களை வீசி தாக்கினர். சிறை வளாகத்தில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். 

உடனே சிறை பாதுகாவலர்கள் உள்ளே சென்று மோதலை தடுத்து நிறுத்தினர். சிறையின் துணை அதிகாரி ஷியாமல் பட்டாச்சார்யா இரு குழுவினரையும் அமைதிப்படுத்த முயன்றார். அப்போது அவரை கைதிகள் சிலர் தாக்கி உள்ளனர். இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மோதலைத் தொடர்ந்து சிறையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட கைதிகளிடம் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து வன்முறை முடிவுக்கு வந்தது. 

இந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. சிறை நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாக கைதிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com