ஆற்காடு அருகே குடிமராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு

ஆற்காடு அருகே குடிமராமத்து பணிகளை தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே.சத்தியகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த அதிகாரி
குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த அதிகாரி
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2020-2021ம் ஆண்டுக்கான தமிழக முதல்-அமைச்சரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின் மூலம் பணிகள் நடந்து வருகிறது. ஆற்காடு தாலுகாவில் உள்ள முள்ளுவாடி மற்றும் புதுப்பாடி ஏரிகளில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே.சத்தியகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, உதவி கலெக்டர் இளம்பகவத், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com