ராஜபக்சே பதவி ஏற்றபோது கீழே விழுந்த அதிகாரி

இலங்கையில் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றபோது பிரதமரின் செயலாளர் கீழே விழுந்து விட்டார். இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. #Rajapaksa
ராஜபக்சே பதவி ஏற்றபோது கீழே விழுந்த அதிகாரி
Published on

கொழும்பு:

இலங்கையில் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நேற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். அப்போது பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேகர கீழே விழுந்து விட்டார்.

இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. எனினும் ராஜபக்சே ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர்.

செயலாளர் கீழே விழவில்லை. அவர் கீழே அமர்ந்திருந்த நிலையில் எழுந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rajapaksa

X

Maalai Malar
www.maalaimalar.com