பானி புயல் எதிரொலி - ஒடிசாவில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம்

ஒடிசாவில் பானி புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பல்வேறு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். #CycloneFani
பானி புயல் எதிரொலி - ஒடிசாவில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம்
Published on

புவனேஷ்வர்:

வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் இன்று கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப் பகுதியில் பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், ஒடிசாவில் பானி புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பல்வேறு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பானி புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி 200-க்கும் மேற்பட்ட ரெயில்களை தென்கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. 

முன்னெச்சரிக்கையாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புவனேஷ்வர், கொல்கத்தா விமான நிலையங்க்ள் மூடப்பட்டுள்ளன. #CycloneFani

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com