ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்தியநாத புரத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் நிதின் பிரதாப் (வயது 19). இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கல்லூரியில் மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் இவரது நண்பர்கள் வினோத், சுஜித், அருண்குமார், குமார் ஆகியோர் விருப்பாட்சி தாளையூத்து அருவியில் நண்பர்களுடன் குளிக்க சென்றனர்.

நிதின் பிரதாப் (19) என்ற இளைஞர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சத்திரப்பட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com