ஒட்டன்சத்திரத்தில் செல்போன் கடையில் திருட்டு

ஒட்டன்சத்திரத்தில் செல்போன் கடையில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரத்தில் உள்ள ராகு செட்டியார் பேட்டையை சேர்ந்தவர் முகமதுதாகீர் (வயது 30). ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் முகமது தாகீர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்காக ஒட்டன்சத்திரம் பகுதியில் கடைகளில் தொடர் திருட்டு நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இரவு நேரத்தில் ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com