ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 13 பவுன் நகை கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பீரோவில் இருந்த நகை கொள்ளை போனது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு வண்டிப்பாதையை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி பூங்கொடி (வயது 45). சம்பவத்தன்று தோட்டத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். அவரது மகள் ஜெயந்தி ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மாலை வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோஉடைக்கப்பட்டு அதில் இருந்த நகை 13 பவுன் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயந்தி தனது தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே வீட்டுக்கு வந்த பார்த்த பூங்கொடி நகை கொள்ளை போனது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பூங்கொடி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், பூங்கொடி அளித்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com