ஒட்டன்சத்திரம் அருகே கடனை திருப்பி தராததால் விவசாயியை வெட்டி கொன்ற பைனான்சியர்

ஒட்டன்சத்திரம் அருகே கடனை திருப்பி தராததால் விவசாயியை பைனான்சியர் வெட்டிக் கொலை செய்தார். #Murdercase
ஒட்டன்சத்திரம் அருகே கடனை திருப்பி தராததால் விவசாயியை வெட்டி கொன்ற பைனான்சியர்
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் கஞ்சி காளியம்மன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (வயது 65). விவசாயி. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சின்னத்துரை (55) என்பவரிடம் விவசாயத் தேவைக்காக ரூ.2½ லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதற்காக மாதம் தோறும் வட்டி செலுத்தி வந்துள்ளார்.

மழை இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருமலைசாமியும் விவசாயம் செய்ய முடியாமல் திணறினார். பயிரிட்ட பயிர்கள் கருகியதால் போதிய லாபம் கிடைக்கவில்லை. மேலும் சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் வட்டி மற்றும் அசல் பணத்தை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. சின்னத்துரை பல முறை திருமலைசாமியிடம் பணத்தை கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு திருமலைசாமியின் வீட்டுக்கு சென்ற சின்னத்துரை பணத்தை கொடுக்குமாறு கடுமையாக பேசியுள்ளார். தான் விவசாயத்தில் கடும் நஷ்டமடைந்துள்ளதாகவும், எனவே பணத்தை சிறிது காலம் கழித்து தருகிறேன் என திருமலைசாமி கூறியுள்ளார்.

ஆனால் இதை ஏற்க மறுத்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த சின்னத்துரை மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திருமலைசாமியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த திருமலைசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியனார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். அங்கு விவசாயி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து கள்ளிமந்யைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து திருமலைசாமியின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சின்னத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Murdercase

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com