ஒட்டன்சத்திரம் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள் பலி

ஒட்டன்சத்திரம் அருகே டயர்வெடித்து வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள் பலியானார்கள்.
ஒட்டன்சத்திரம் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள் பலி
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம், பொருளூர், தேவத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து திருப்பூருக்கு கூலி வேலைக்கு தினசரி ஆட்கள் சென்று வருகிறார்கள்.

இவர்களை ஏற்றி செல்வதற்காக தனியார் நிறுவனம் சார்பில் வேன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது இந்த பஸ் காலையில் ஆட்களை அழைத்து சென்று பின்னர் மாலையில் அவர்களது ஊருக்கு வந்து விடுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிய வேன் தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. 4 ரோடு பிரிவில் சென்ற போது வேன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் டிரைவரை கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள பள்ளதில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தொழிலாளர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி தேவத்தூரை சேர்ந்த வீரம்மாள் (வயது 50), பொருளூரை சேர்ந்த ரேவதி (35) ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com