

மும்பை:
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடர் 22-ந் தேதி தொடங்குகிறது.
அதற்கு முன்பு நியூசிலாந்து அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி இந்திய போர்டு தலைவர் லெவருடன் மோதும் முதல் பயிற்சி ஆட்டம் மும்பையில் நாளை நடக்கிறது. போர்டு தலைவர் அணிக்கு ஷிரேயாஸ் கேப்டனாக உள்ளார்.