நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தியது ஆஸ்திரேலிய பயங்கரவாதி

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். #MosqueShooting #NewZealandShooting
நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தியது ஆஸ்திரேலிய பயங்கரவாதி
Published on

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூடு குற்றவாளி  "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி உள்ளான். 73 பக்கத்தில் தனது நோக்கங்களை அதில் அவன்  தெரிவித்து உள்ளான்.

நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார். விசாரணைக்கு உதவுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். #MosqueShooting #NewZealandShooting

X

Maalai Malar
www.maalaimalar.com