வில்லியனூரில் நர்சிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை

வில்லியனூரில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூரில் நர்சிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் கூடப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் கலியவரதன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் பச்சையம்மாள் (வயது 19). பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.

கலியவரதனுக்கும், லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. அதேபோல் கடந்த 20-ந்தேதியும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனை கண்ட பச்சையம்மாள் மனவேதனை அடைந்து வீட்டு மாடிக்கு சென்று ஆஸ்பெட்டாஸ் சீட் பைப்பில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார்.

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த கலியவரதனும், லட்சுமியும் பச்சையம்மாளை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பச்சையம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் ஏட்டு கிருபாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com