

நாகர்கோவில்:
தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மகள் பிளஸ்சி (வயது 20). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்தார்.
நேற்று வீட்டில் இருந்து கொட்டாரத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் மாலை நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர்.