தக்கலை - கோட்டாரில் நர்சிங் மாணவி-தொழிலாளி மாயம்

தக்கலை மற்றும் கோட்டாரில் நர்சிங் மாணவி, தொழிலாளி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
தக்கலை - கோட்டாரில் நர்சிங் மாணவி-தொழிலாளி மாயம்
Published on

தக்கலை:

தக்கலையை அடுத்த மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் முருகன். பால்வெட்டும் தொழிலாளி. இவரது மகள் அனிஷா (வயது 21). இவர் நர்சிங் படித்துள்ளார்.

இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்து நாகர் கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அனிஷா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

நாகர்கோவில் கோட்டார் பூசாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (41). தொழிலாளி. இவர் கடந்த மாதம் 15-ந்தேதி வீட்டில் இருந்து மதுரைக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றார். சில நாட்கள் கழித்து அவரை தொடர்பு கொண்ட போது எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லை.

இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தொழிலாளி நாராயணனை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com