கற்பழிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டம்

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தரைச் சேர்ந்த பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.#FrancoMulakkal #NunsProtest
கற்பழிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டம்
Published on

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ  மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் ஃப்ராங்கோ  மூலக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

அவர்கள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், பிஷப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், எங்களின் சகோதரிக்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். அவருக்கு உரிய நீதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. அவருக்கு நீதி கிடைக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளோம் என தெரிவித்தனர். #FrancoMulakkal #NunsProtest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com