

கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காடு கன்னியர் மடத்தில் தங்கியிருந்த கன்னியாஸ்திரி ஒருவருக்கு ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிராங்கோ முல்லக்கல் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இப்புகார் தொடர்பாக கோட்டயம் போலீசார் ஜலந்தர் சென்று ஆயர் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரணை நடத்தினர். மேலும் வருகிற 19-ந்தேதி அவர், கோட்டயம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
இதற்கிடையே கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆயர் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகன் தலையிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்தது.
கேரளாவில் இருந்து ஏராளமானோர் இதுதொடர்பாக வாடிகன் அரண்மனைக்கு புகார்கள் அனுப்பியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து, வாடிகன் அரண்மனைக்கான இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி தற்போது வாடிகன் நகருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கேரள கன்னியாஸ்திரி விவகாரம் தொடர்பாக வாடிகன் அரண்மனை விசாரித்து வருவதாக வெளியான தகவலை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் இன்று மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இப்படிப்பட்ட செய்திகள் பொய்யாக இருக்கலாம். கேரளாவிலும் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களை நீர்த்துப்போக செய்வதற்காக இப்பட்டிப்பட்ட புரளிகளை பிராங்கோ முல்லக்கல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பரப்பலாம்.