அல்பேனியாவில் தொடர் நிலநடுக்கங்களால் மக்கள் பீதி - 68 பேர் காயம்

அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் சேதமாகின. இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.
நிலநடுக்கத்தில் சேதமான கட்டிடம்
நிலநடுக்கத்தில் சேதமான கட்டிடம்
Published on

மாஸ்கோ:

அல்பேனியா நாட்டின் துறைமுக நகரான டூயுரசில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.05 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.4 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமாகின. இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இன்று அதிகாலை 2.53 மணியளவில் 6.4 ரிக்டர் அளவுகோலில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com