காக்களூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய 200 வீடுகளை அகற்ற நோட்டீஸ்

திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை 21 நாட்களுக்குள் காலி செய்து கொள்ளுமாறு கோட்டாட்சியர் ரத்னா நோட்டீஸ்களை வழங்கினார்.
ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை கோட்டாட்சியர் ரத்னா ஆய்வு செய்தார்
ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை கோட்டாட்சியர் ரத்னா ஆய்வு செய்தார்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஏரி 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது இதில், ஏரியைச் சுற்றிலும், 200 க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் ஏரியில் நீர் ஆதாரத்தை ஏற்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில் மழைநீரை சேகரிக்கவும், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை உடனே அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து காக்களூர் ஏரிக்கரை பகுதியை திருவள்ளூர் கோட்டாட்சியர் ரத்னா, வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பின் அங்கு வீடு கட்டியுள்ளவர்களிடம் நீதிமன்ற உத்தரவினை எடுத்துக் கூறி தங்களது வீடுகளை 21 நாட்களுக்குள் காலி செய்து கொள்ளுமாறு கோட்டாட்சியர் ரத்னா நோட்டீஸ்களை வழங்கினார்.

மேலும் வீடுகளை இழந்தோருக்கு பட்டரைபெரும்புதூரில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com