வடமாநில வாலிபர் அடித்து கொலை - தலைமறைவான 2 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

மடத்துக்குளம் அருகே வடமாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவான 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வடமாநில வாலிபர் அடித்து கொலை - தலைமறைவான 2 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
Published on

உடுமலை:

கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்தவர் பிசீஸ் (வயது 26). இவர் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள குப்பம்பாளையத்தில் தங்கி இருந்து அங்குள்ள மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை பிசீஸ் தான் தங்கி இருந்த அறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த சக ஊழியர்கள் இது குறித்து குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட பிசீசின் உடலை மீடடு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பிசீசை அவருடன் தங்கி இருந்த பப்பு(26), கவுஸ் (27) ஆகியோர் சேர்ந்து பணம் கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

எனவே கொலை செய்து விட்டு தலைமறைவான 2 பேரையும் பிடிக்க டி.எஸ்.பி. ஜெயசந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com