

வத்தலக்குண்டு:
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடமாநிலத்தை சேர்ந்த பலர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
கொரோனா அச்சம் காரணமாக இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து ஆன்லைன் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சுற்றுப்பகுதிகளிலும் வெளிமாநிலங்களை சேர்ந்த பலர் தங்கி இருந்து தனியார் மில்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அமீத் (வயது22). இவர் வத்தலக்குண்டு அருகில் உள்ள லட்சுமிபுரத்தில் மர அறுவை மில்லில் வேலை பார்த்து வந்தார்.
ஊடரங்கு காரணமாக மில்லிலேயே தங்கி இருந்தார். இவர் அடிக்கடி தனது காதலியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே நேற்று மில் அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.