பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு தப்பிய வட மாநில வாலிபர்

பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு தப்பிய வட மாநில வாலிபர்

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு தப்பிய வட மாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Published on

 பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செக்காணூரணியை சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது மகள் வெண்ணிலா(வயது 22). இவர் கப்பலூர் சிப்கோவில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அப்போது வெண்ணிலாவுக்கும், அங்கு வேலை பார்த்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜமால் அலி(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் நெருங்கி பழகினர்.

இதில் அந்த பெண் கர்ப்பமானார். உடனே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினார். ஆனால் ஜமால் அலி அசாமுக்கு சென்று பெற்றோரிடம் சம்மதம் பெற்று விட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார். மேலும் வெண்ணிலாவிடம் கூறாமல் அவர் அசாமுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் ஜமால் அலியை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த வெண்ணிலா நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறினார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பணியாக இருந்த வெண்ணிலாவுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

திருமணம் செய்வதாக கூறி தன் வாழ்க்கையை சீரழித்த ஜமால் அலி மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் வெண்ணிலா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பானுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com