வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென் கொரியா தகவல்

வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரியா பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென் கொரியா தகவல்
Published on

சியோல்:

சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முயற்சியில் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளார். 

தெற்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள புக்சங் பகுதியிலிருந்து இன்று மதியம் வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதாக தென் கொரியா பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினர்.

இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து, தங்கள் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் விழுந்ததாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வரிகொரியாவின் முந்தைய ஏவுகணை சோதனை கடந்த வாரமே நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com