வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியிட மாற்றத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியிட மாற்றத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு பணியாற்றி வரும் 360 தொழிலாளர்கள் மின் விநியோகம் பணிகளுக்காக வெவ்வேறு மின்வாரிய அலுவலுகங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து அனல்மின் நிலைய வாயிலில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 30 ஆண்டுகளாக மின் உற்பத்தி பிரிவில் பணியாற்றி வரும் தங்களை மின் வினியோக பிரிவிற்கு மாற்றம் செய்து தொழிலாளர்களுடனான ஒப்பந்தத்தை மின் வாரியம் மீறுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com