வட சென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. #ThermalPowerStation
வட சென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டுபுதுநகரில் வட சென்னை அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு இரண்டு நிலைகளில் மொத்தம்1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாம் நிலை இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இரண்டாம்நிலை இரண்டாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதில் உற்பத்தி செய்யபட்டு வந்த 600 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது.

தற்போது இரண்டு நிலைகளில் மொத்தம் 1230 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது உற்பத்தி பாதிக்கபட்ட பகுதியை மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com