வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார் யாதாவர்சிங் (வயது 23). ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் நேற்று இரண்டாம் நிலை சாம்பல் கழிவு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது மின்சாரம் தாக்கி யாதா வர்சிங் உயிரிழந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com