

எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 1 எனும் புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனினை ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2018-ம் ஆண்டின் முதல் பாதியில் ஆண்ட்ராய்டு கோ நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கிஸ்மோசைனீ வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 2018-இல் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதன் இந்திய விலை ரூ.6500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு கோ திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் வரும் மாதங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் எச்டி IPS-LCD டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என்றும் கூகுளின் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஒன் மற்றும் ஆண்ட்ராய்டு கோ திட்டங்களின் கீழ் அறிமுகம் செய்யப்படுவதால் குறைந்த ரேம் மற்றும் பிராசஸிங் வேகம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு என ஆப்டிமைஸ் செய்யப்படுகிறது.
நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட இருக்கும் சிப்செட் குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஆண்ட்ரய்டு கோ திட்டத்திற்கு ஏற்ப குவால்காம் மற்றும் மீடயாடெக் செயல்படும் என்பதால் இவற்றில் ஏதேனும் ஒரு சிப்செட் நிச்சயம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நோக்கியா 1 ஸ்மார்ட்போன் சார்ந்து மற்ற தகவல்கள் மர்மமாகவே உள்ளது, எனினும் 2018 ஆண்டில் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. எச்.எம்.டி. குளோவல் வெளியிட்டிருக்கும் சாதனங்களில் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனாக நோக்கியா 2 இருக்கிறது.