சரியான நேரத்துக்கு அலுவலகம் வர மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

அனைத்து மந்திரிகளும் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வரவேண்டும், வீட்டில் இருந்து பணி செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
சரியான நேரத்துக்கு அலுவலகம் வர மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Published on

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் மந்திரிகளுக்கு பிரதமர் மோடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக, மந்திரிகள் அனைவரும் காலந்தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதன்படி அனைத்து மந்திரிகளும் ஒழுங்காக அலுவலகத்துக்கு வரவேண்டும் எனவும், அதுவும் சரியான நேரத்துக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் அலுவலகம் வந்தவுடன், புதிய பணிகள் குறித்து அமைச்சக அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வீட்டில் இருந்து பணி செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com