சசிகலா, இளவரசிக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படவில்லை: நேரில் ஆய்வு செய்த மந்திரி பேட்டி

பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசிக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படவில்லை கர்நாடக உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
சசிகலா, இளவரசிக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படவில்லை: நேரில் ஆய்வு செய்த மந்திரி பேட்டி
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசிக்கு மீண்டும் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருவது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், நேற்று அந்த சிறைச்சாலையை நேரில் சென்று ஆய்வு செய்தேன்.  சசிகலா மற்றும் இளவரசிக்கு அங்கு சிறப்பு சலுகைகள் ஏதும் அளிக்கப்படவில்லை. இதர கைதிகள் போலத்தான் அவர்களும் நடத்தப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

சிறையில் சசிகலாவுக்கு என்ன வேலை அளிக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமலிங்க ரெட்டி, அவருக்கு என்ன வேலை அளிக்கப்பட்டுள்ளது? என நான் சிறை அதிகாரிகளை கேட்கவில்லை. ஆனால், கோர்ட் உத்தரவின்படி அவருக்கு வேலை அளிக்கப்பட்டிருக்கும் என கருதுகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com