மாணவர்கள் ஆபாச படங்கள் பார்ப்பதை தவிர்க்க பள்ளிகளில் ஜாமர் பொருத்தப்படுமா? - மத்திய அரசு பதில்

மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்ப்பதை தடுக்க பள்ளி வளாகத்தில் ஜாமர் கருவி பொருத்தபடுமா? என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மாணவர்கள் ஆபாச படங்கள் பார்ப்பதை தவிர்க்க பள்ளிகளில் ஜாமர் பொருத்தப்படுமா? - மத்திய அரசு பதில்
Published on

புதுடெல்லி:

மாணவர்கள் செல்போன்கள் மூலம் ஆபாச இணையதளங்களை பார்ப்பதை தவிர்க்கும் வகையில் பள்ளி வளாகங்களில் ஜாமர் கருவி பொருத்தப்படுமா? என்று மாநிலங்களவையில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி உபேந்திரா குஷ்வாகா எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

பள்ளி மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்ப்பதால் நாட்டில் மாணவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகமாகி வருவதாக கூறப்பட்டது. இதற்கு பள்ளிகளில் ஜாமர் கருவி பொருத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஜாமர் பொருத்தும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

ஜாமர் பொருத்துவதால் பள்ளிகளில் மாணவர்கள் கணினி பயன்படுத்தும் போது மற்ற இணையங்களை பயன்படுத்த முடியாது. அதனால் பள்ளிகளில் ஜாமர் பயன்படுத்த முடியாது.

ஆனால் பள்ளி பேருந்து டிரைவர் அல்லது யாரேனும் ஆபாச இணையதளங்களை பயன்படுத்தாமல் இருக்க பேருந்துகளில் ஜாமர் பொருத்தப்படலாம்.

மேலும் இந்த பிரச்சனையை சரி செய்ய அனைத்து பள்ளிகளிலும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும். மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com